வங்கி அதிகாரியின் வீட்டில் 225 சவரன் கொள்ளை, பணிப்பெண் உட்பட 5 பேர் கைது

598

சென்னையில் வங்கி அதிகாரியின் வீட்டில் 225 சவரன் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில், வீட்டின் பணிப்பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னையை அடுத்த ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்தவர் தனியார் வங்கியின் தலைமை பொது மேலாளர் யோகசேரன். இவரது வீட்டில் முகமூடி கொள்ளையர்கள் 225 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.

இதையடுத்து வங்கி மேலாளர் வீட்டின் அருகாமையில் பொருத்தப்பட்ட சி.சி.டிவி கேமராவில், காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் உலாவியதும், ஒருவர் முதுகில் BAG மாட்டிக்கொண்டு ஒடுவது போன்ற காட்சியும் இடம்பெற்றிருந்தது.

இதைதொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் யோகசேரன் வீட்டில் வேலை செய்யும் மதுரையை சேர்ந்த ராணியே, இந்த கொள்ளைக்கு மூலையாக செயல்பட்டது தெரியவந்தது.

robbery-aquest

மேலும் வீட்டில் இருந்த நாய்களை விஷம் வைத்து கொன்றது, காது கேட்காதது போன்று நடந்தது என பல தில்லு முல்லு வேலைகளை அரங்கேற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மதுரை விரைந்த போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட பணிப்பெண் ராணி, செல்வம், சுரேஷ், கவுதம், அருண் ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 200 சவரன் தங்க நகைகள், இரண்டு கத்திகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர் 5 பேரையும் சென்னை அழைத்து வந்த போலீசார், பல்லாவரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர், இதைதொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Advertisement