ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்!! சீமான் அதிரடி

419

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப் போவதாக சீமான் அறிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலில் போட்டியிட விருப்பமனுக்களைத் தங்கள் கட்சியினரிடம் பெற்று வருகின்றன.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்கட்சியின் வேட்பாளர்களை வருகிற ஞாயிற்றுக்கிழமை ஒய்.எம்.சி.யே மைதானத்தில் ஒரே மேடையில் அறிவிக்க உள்ளார். அதுகுறித்து பேசிய அவர் யாருடனும் கூட்டணி இல்லை என்றும் 234 வேட்பாளர்களில் 117 பேர் பெண்கள் அதவது 50% வேட்பாளர்கள் பெண்கள் என்றும் கூறினார்.

Advertisement