இலங்கை கடற்படையின் 23வது தளபதியாக ரியர் அட்மிரல் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்ட சில்வா, அதிபரிடம் இருந்து நியமன கடிதத்தை பெற்றுக் கொண்டார்.இன்று முதல் இலங்கையின் புதிய கடற்படை தளபதியாக டி சில்வா பணியை தொடர்வார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே கடற்படை தளபதி பதவியிலிருந்து இன்று ஓய்வு பெறவுள்ள தற்போதைய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமெவன் ரனசிங்கவுக்கு, அதிபர் சிறிசேனா தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதேசமயம் கடற்படைத் தளபதி பதவியிலிருந்து ஓய்வு பெறும் சிறிமெவன் ரனசிங்க அட்மிரல் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.