24 கொரோனா நோயாளிகள் இன்று ஒரே நாளில் பலி

218

சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில்  கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. நேற்று இரவு முதல் இன்று காலை வரை சிறப்பு உதவி ஆய்வாளர் உள்பட 24 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதில், ஸ்டாலின் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 76 வயது முதியவர் உள்பட 5 பேரும், ஓமந்தூரார் மருத்துவமனையில் 4 பேர், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 7 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.