தூங்கா மாநிலமாகும் தமிழகம் – அரசாணை வெளியீடு!

787

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தொழில்வளர்ச்சியை மேம்படுத்தவும்,வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் 24 மணிநேரமும் கடைகள், வணிகவளாகங்கள் செயல்படுவதற்கு, அனுமதி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரியும் கடைகள், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், ஜவுளிக்கடைகள் ஆகியவற்றை 24 மணிநேரமும் திறந்து வைக்கலாம் என்று அந்த அரசாணையில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

வாரம் ஒருநாள் கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என்றும், தொழி்ல் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசு இயற்றிய சட்டத்தின் அடிப்படையில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 மணிநேரமும் கடைகளை திறந்து வைப்பதற்கான அனுமதி அளிக்கும் இந்த அரசாணை அடுத்த மூன்றாண்டுகளுக்கு அமலில் இருக்கும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.