சொந்த ஊருக்கு தப்ப முயன்ற தொழிலாளர்கள்..! கைது செய்த போலீஸ்..!

285

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, வெளி மாநிலங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் அங்கேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமையன்று தங்களது சொந்த ஊருக்கு தங்களை அனுப்பி வைக்க வேண்டும் என புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மும்பையில் உள்ள பாந்திர ரயில்வே நிலையம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில், 800-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே, நேற்று மும்பையில் இருந்து உத்திர பிரதேசத்திற்கு செல்ல முயன்ற 24 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய பிறகு, 24 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of