மது கொடுக்க மறுத்த ஊழியர்களை தாக்கியது தொடர்பாக 25 மருத்துவர்கள் கைது

676

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள பிரபலமான மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் 25 ஜூனியர் மருத்துவர்கள் கடந்த சனிக்கிழமை பார் ஒன்றிற்கு சென்றுள்ளனர். பார் மூடும் நேரம் என்பதால் அவர்களுக்கு மது கொடுக்க மறுக்கப்பட்டதாக கூறப்படுகறிது.

இதனால் கோபம் அடைந்த மருத்துவர்கள் ஊழியர்களை அடித்து நொறுக்கியதுடன் அங்கிருந்த பொருட்களையும் உடைத்துள்ளனர். மேலும் அங்கு வந்த போலீசாரையும் தாக்கியுள்ளனர். இதையடுத்து அந்த 25 மருத்துவர்களும் கைது செய்யப்பட்டனர்.

மருத்துவர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து மருத்துவக் கல்லூரியில் உள்ள பிற மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

Advertisement