பயங்கரவாதிகள் 250 பேர் கொள்ளப்பட்டது உண்மை தான்.., அமித்ஷா

615

கடந்த மாதம் பிப்.14 ஆம் தேதி புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானப்படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 300-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதை இந்திய அரசு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அறிவிக்கவில்லை என எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். இதற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்தார்.இதுகுறித்து பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அகமதாபாத்தில் பேசியபோது, புல்வாமா தாக்குதலுக்கு தற்சமயம் தக்க பதிலடி கொடுக்க முடியாது என அனைவரும் நினைத்திருந்தனர்.

ஆனால், தாக்குதல் நடந்த சில நாட்களிலே பிரதமர் மோடி விமானப் படை தாக்குதல் நடத்தியதில் 250-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்தனர் என்பது உண்மை தான் என கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of