தூத்துக்குடியில் கருத்து கேட்பு கூட்டத்தில் 2500 மனுக்கள் பெறப்பட்டது – சந்தீப் நந்தூரி

611

தூத்துக்குடியில் நேற்று நடந்த மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் 2 ஆயிரத்து 500 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் அவர், தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மலேசியா மணல் நாளை முதல் விற்பனை தொடங்கும் என்றும் இடைத்தரகர்கள் இல்லாமல் ஆன்லைன் மூலம் பொதுமக்கள் மணலை வாங்கலாம் எனவும் கூறினார்.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் நேற்று நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் 2 ஆயிரத்து மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

Advertisement