திருமணமான 28 வயது பெண்..! – 21 வயது ஆணின் ஆசை..! -பெண்ணின் வீட்டில் நடந்த விபரீதம்..!

5949

திருமணமான 28 வயது பெண்ணை 21 வயது இளைஞனின் ஆசைக்கு இணங்காததால் தீயிட்டு கொளுத்திய திகில் சம்பவம் நடந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே பாக்கம்பாடி காட்டுக்கொட்டாய் என்ற பகுதியை சேர்ந்த6வர் சின்னதுரை. இவரது மனைவி அருணாதேவி. 8 வருடங்களுக்கு முன்பு கல்யாணம் ஆனது.

இப்போது அருணாதேவிக்கு வயது 28. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சின்னத்துரை சிங்கப்பூரில் வேலை பார்க்கிறார். அதனால் அருணாதேவி தனது 2 மகன்களுடன் மாமியாருடன் வசித்து வருகிறார்.

கடந்த வருடம் அண்ணன் பிரசாந்ந் தங்கையை பார்க்க வந்திருந்தார். அப்போது, அவருடன் நண்பர் ஏழுமலையும் வந்திருந்தார். ஏழுமலைக்கு வயசு 21. அருணாதேவியை பார்த்ததுமே ஏழுமலைக்கு ஆசை வந்துவிட்டது. கொஞ்ச நேரத்திலேயே செல்போன் எண்ணையும் வாங்கிக்கொண்டு, ஊருக்கு வந்து அருணாதேவியிடம் பேச ஆரம்பித்தார்.

அவர்கள் பேச ஆரம்பித்த சில நாட்களிலேயே ஏழுமலை பேச்சில் இரட்டை அர்த்தம் தெரிந்தது. அதனால் அவரை அருணாதேவி தவிர்க்க ஆரம்பித்தார். எச்சரித்தார். செல்போனையும் ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டார். இதனால் அருணாதேவியிடம் பேச முடியாமல் தவித்த ஏழுமலை, நேராக அருணாதேவி வீட்டுக்கே சென்றுவிட்டார்.

அந்த நேரம் அருணாதேவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இது ஏழுமலைக்கு இன்னும் சாதகமாகிவிட, அருணாதேவியை கட்டிப்பிடிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த அருணாதேவி, வீட்டிற்குள் அங்கும் இங்கும் ஓட,  எரிச்சல் அடைந்த ஏழுமலை, அங்கிருந்த மண்எண்ணையை எடுத்து அருணாதேவியின் உடலில் ஊற்றி தீ வைத்துவிட்டார்.

அருணாதேவி உடலில் நெருப்பு பற்றி கொண்டு எரியவும், அலறி துடித்தார். அவரை காப்பாற்ற முயல்வது போல பாசாங்கு செய்த ஏழுமலை உடலிலும் லேசான தீப்பிடித்தது. அதற்குள் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, இருவரையும் மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

உயிருடன் எரித்து கொல்ல முயன்ற வழக்கில், சிகிச்சை முடிந்ததும் ஏழுமலை கைதாவார் என்று தெரிகிறது. இப்போது 90 சதவீதம் உடல் எரிந்த நிலையில் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருகிறார் அருணாதேவி.

Advertisement

1
Leave a Reply

avatar
1 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
1 Comment authors
Jesudoss Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
Jesudoss
Guest
Jesudoss

இந்த ஏழுமலை போன்றவர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டிய அவசியம் என்ன ? நீதித்துறை சிந்திக்கவேண்டும், தாமதமாக வரும் தீர்பும் பாதிக்கப்பட்டவருக்கு வரும் அநிநீதியே.. இந்தியா போன்ற நாடுகளில் குற்றங்கள் குறைய கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் ஜீவனுக்கு ஜீவன் எடுப்பதே சரி.