28-வது தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாடு – கிருஷ்ணா நதி நீர் உள்ளிட்ட 22 பிரச்சனைகளுக்கு தீர்வு

683

தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டில் சென்னைக்கு கிருஷ்ணா நதி நீர் வழங்குவது உள்ளிட்ட 22 பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டது.

மத்திய உள்துறை சார்பில் 28வது தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாடு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் பொருளாதார வளர்ச்சி, சமூக வளர்ச்சி, மீனவர்கள் பாதுகாப்பு உள்பட 27 அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் சென்னை நகரின் குடிநீர் தேவைக்கு கிருஷ்ணா நதி நீரை வழங்குவது உள்பட 22 பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டது.

மீன்பிடி உரிமை தொடர்பாக பழவேற்காடு ஏரி விவகாரத்தில் ஆந்திரா-தமிழ்நாடு இடையேயான பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. தென்மண்டல முதலமைச்சர்கள் குழுவின் அடுத்த மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

Advertisement