நடுரோட்டில் தப்பா நடந்துகிட்டாரு.. டிராபிக் போலீஸ்க்கு பளார்.. பெண் செய்த சித்து வேலை..

3305

பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கான சட்டம் சரியாக இல்லாததே, இம்மாதிரியான குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணம் என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

ஆனால், இன்னொரு புறம், தங்களுக்கு பாதுகாப்பு தரும் பல்வேறு சட்டங்களை சில பெண்கள் துஷ்பிரயோகம் செய்கின்றனர்.

மும்பையில் உள்ள கல்பதேவி என்ற பகுதி வழியாக, 29 வயதான பெண் ஒருவர், தனது ஆண் நண்பருடன் பைக்கில் வந்துக்கொண்டிருந்தார். அப்போது பணியில் இருந்த போக்குவரத்து காவலர், அவர்களை பிடித்து, அபராதம் விதிக்க முயன்றார்.

இதனால் கடும் கோபமடைந்த அப்பெண், காவலரை தாக்கியதோடு, பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றம்சாட்டினார். இதுதொடர்பான வீடியோ வைரலாகியதையடுத்து, அந்த பெண் மற்றும் அவரது ஆண் நண்பரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement