14வயது சிறுமியை திருமணம் செய்ய கடத்தி சென்ற 29 வயது இளைஞர்!

308

கடலூட் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வட்டத்திற்குட்பட்ட முடிகண்டநல்லூர் கிராமத்தை சேர்ந்த பார்வதி 14 வயது. இவருக்கு பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவர் சிதம்பரம் மகளிர் மேல் நிலைப்பள்ளியில் 9-வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளி முடித்து வீடு திரும்பவில்லை எனவே அவரது பெற்றோர்கள் சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனார்.

அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் விருத்தாசலம் தலுக்கா பூதாமூரை சேர்ந்த சீனிவாசன் மகன் செல்வகுமார் 29 இவர் மாணவியை காதலிக்கிறேன் என்ற ஆசை வார்த்தைகளை கூறி சென்னைக்கு அழைத்துச்சென்றதாக விசாராணையில் தெரியவந்தது.

பின்னர் இவர்களின் செல்போன் மூலம் அவர்கள் சிதம்பரம் ரயில் நிலையத்தில் வேறு ஊருக்கு செல்ல காத்திருந்தனர். தக்க நேரத்தில் அவர்களை போலீசார் அவர்களை மடக்கி பிடித்து சிறுமியை மீட்டனர்.

விசாரணையில் சிறுமியை திருமணம் செய்ய கடத்தி சென்றதாக தெரியவந்ததால் செல்வக்குமாரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

செல்வக்குமார் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் இரு பெண்களை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியவர் என கூறப்படுகிறார்கள்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of