2வது ஒரு நாள் போட்டி – 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

238

ராஜ்கோட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித், தவான் ஆகியோர் நேர்த்தியாக ஆடி நல்ல அடித்தளம் அமைத்தனர். ரோகித் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்த பின், களமிறங்கிய கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அதிரடியாக ஆடிய தவான் 96 எடுத்து 4 ரன்களில் சதத்தை தவறவிட்டார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்தியா 340 ரன்கள் குவித்தது. ராகுல் 80 ரன்களும், கோலி 78 ரன்களும் விளாசினர்.

இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்களும் இந்திய அணியின் பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தனர்.

LABUSCHANGE, ஸ்மித் இணை பிரிந்த பிறகு அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த தடுமாறியது. முடிவில் அந்த அணி 304 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

Advertisement