ஈராக் மாகாணத்தில் ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்!!

1064

கிழக்கு ஈராக்கின் தியாலி மாகாணத்தில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் சமீபத்தில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட 25 வயது பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் ஆறு ஆண், ஒரு பெண் என்று ஏழு குழந்தைகள் பிறந்துள்ளன.அனைத்து குழந்தைகளும் நலமாக உள்ளன. பிரசவமான பெண்ணுக்கு ஏற்கனவே  மூன்று குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தற்போது எங்களுக்கு மொத்தம் பத்து குழந்தைகள் இருக்கின்றனர்.

இவர்கள் அனைவரையும் ஒரே சமயத்தில் கவனித்துக் கொள்ள வேண்டும். இதனால் இனியும் குழந்தை பெறும் எண்ணம் இல்லை என்று குழந்தைகளின் தந்தை தெரிவித்தார்..

ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் என்பது உலகில் இது இரண்டாவது முறையாகும். உலகில் முதல் முறையாக 1997ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் பிறந்தனர்.