பிரமாண்டமாக வெளியானது 2.0 டிரைலர்

1074
2.0-poster

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘2.0’. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகி இருக்கிறது.

இந்த படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் பத்திரியாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் ஷங்கர், ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன், ஏ.ஆர்.ரஹ்மான், படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், சினிமா பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பிரத்யேகமாகப் படத்தின் பாடல்கள் 3டி-யில் காட்சிப்படுத்தப்பட்டது. தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத புது விதமான டிஜிட்டல் சவுண்டு சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த டிஜிட்டல் சவுண்டு சிஸ்டம் குறித்தும் பத்திரிகையாளர்களுக்கு விளக்கப்பட்டது.

பின்னர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டது.

இந்திய படங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு கிராபிக்ஸ் காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளன. கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த கிராபிக்ஸ் பணிகளுக்காக மட்டும் கிட்டத்தட்ட 543 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 3 ஆயிரம் பேர் இந்த கிராபிக்ஸ் பணிகளைச் செய்திருப்பதாக ‌ஷங்கர் தெரிவித்துள்ளார்.

Advertisement