3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் விடுமுறை எதிரொலி

1135

தேர்தலை முன்னிட்டு 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் விடுமுறையால், மதுபானம் வாங்க டாஸ்மாக் கடைகளில் குடிமகன்களின் கூட்டம் அலைமோதியது.

சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதனால் மூன்று நாட்களுக்கு சேர்த்து மதுபானங்களை வாங்கி, இருப்பு வைத்துக்கொள்ள மதுப்பிரியர்கள் தீவிரம் காட்டினர்.

இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் கூட்டம் அலைமோதியது. டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.

இதனால் பல டாஸ்மாக் கடைகளில் இரவு கடை மூடும் வரை கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

அதன்படி, திருச்சி  சத்திரம் பேருந்து நிலையம், திருவானைக்காவல், மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மதுபான கடைகளில் சமூக இடைவெளி மற்றும் முகக் கவசம் அணியாமல் மதுபானங்கள் வாங்க குடிமகன்கள் குவிந்தனர்.

இதனால் அரசு அறிவித்த பெருந்தொற்று விதிமுறைகள் காற்றில் பறக்க விடப்பட்டன

Advertisement