மின்சார ரயிலில் கிடந்த 3 மாத ஆண் குழந்தை..!

375

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்திற்கு, கடற்கரையிலிருந்து இருந்த வந்த மின்சார ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில் 3 மாத ஆண் குழந்தை துணியால் மூடப்பட்ட நிலையில்  கிடந்தது தெரியவந்தது.

இதனையடுத்து பொதுமக்கள் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து குழந்தையை மீட்ட ரயில்வே‌ பாதுகாப்பு படையினர், குழந்தை ந‌ல பாதுகாப்பு மையத்தில் அக்குழந்தையை ஒப்படைத்தனர்.மீட்கப்பட்ட குழந்தைக்கு உணவளித்த நிலையில், குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறது. குழந்தையை வீசிச் சென்ற நபர் யார் என்பது குறித்தும் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of