விலாசம் கேட்பது போல், முதியவரிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது

1043

சென்னை வளசரவாக்கத்தில் விலாசம் கேட்பது போல், முதியவரிடம் செல்போன் பறித்து சென்ற 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

சென்னை நெற்குன்ரம் பகுதியை சேர்ந்த ஜெயபாண்டியன் என்பவர் வளசரவாக்கம் பகுதியில் இருசக்கர வானகத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் ஜெயபாண்டியனிடம் விலாசம் கேட்பது போல் நாடகாமடி அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர்.

இந்த சம்பவத்தில் இருசக்கர வாகனத்துடன் இழுத்து செல்லப்பட்ட ஜெயபாண்டியன் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் தனிப்படை அமைத்து சிசிடிவி கேமரா காட்சிகளை மூலம் மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், விருகம்பாக்கத்தை சேர்ந்த பள்ளி மாணவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து செல்போன், இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்கள் மீது மற்ற திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கிறார்களா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement