நாயை அடித்து கொன்ற 3 பேர் கைது

245

சென்னை அண்ணா நகர் அருகே நாயை அடித்து கொன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் நிஷால் ஜெயந்த். இவர் சென்னையில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அவர் தங்கியிருக்கும் குடியிருப்பில் கடந்த ஒன்றாம் தேதி இரவு 8 மணி அளவில் அந்த குடியிருப்பு பகுதி செயலாளர் ராஜ்சுந்தர் மற்றும் காவலாளி செந்தில் உள்பட 3 பேர், அந்த குடியிருப்பில் சுற்றித்திரிந்த ஒரு தெரு நாயை அடித்து கொலை செய்துள்ளனர்.

இது தொடர்பாக நிஷால் ஜெயந் கொடுத்த புகாரை பெற்ற போலீசார் குடியிருப்பின் செயலாளர் ராஜ்சுந்தர், காவலாளி செந்தில் உட்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்கள அனைவரும் காவல் நிலையத்தில் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.