ஏசியால் ஏற்பட்ட விபரீதம்! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி!

1655

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள காவேரிபட்டினத்தை சேர்ந்தவர் ராஜி. இவர் அதே பகுதியில் வெல்டிங் கடை வைத்துள்ளார்.

இவர் நேற்று இரவு தனது மனைவி லதா, மகன் கவுதம் ஆகியோருடன் ஏசி பொருத்தப்பட்ட அறையில் உறங்கி கொண்டிருந்தார். அப்போது ஏசி இயந்திரத்திலிருந்து மின்கசிவு ஏற்பட்டது.

இதையடுத்து மூவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.இதைத் தொடர்ந்து தூக்கத்தில் இருந்ததால் அவர்களால் மின்கசிவு குறித்து உணரமுடியவில்லை. மயக்க நிலையிலேயே 3 பேரும் பலியாகிவிட்டனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of