சாக்கடையை சுத்தம் செய்த 3 பேர் விஷவாயு தாக்கி பலி

599

மும்பை, காலுண்டே பகுதியில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணி ஒப்பந்ததாரர் விலாஸ் என்பவரின் தலைமையில் நடைபெற்று வந்தது. நேற்று நடைப்பெற்ற இந்த பணியில் 2 பேர் சாக்கடையை சுத்தம் செய்ய உள்ளே இறங்கினார்.  தொழிலாளர்கள் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விலாஸ், பாதாள சாக்கடைக்குள் இறங்கினார்.

ஆனால் அவரும் திரும்பவில்லை. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக இதுபற்றி தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பாதாள சாக்கடையில் இறங்கினார்கள். அப்போது, உள்ளே 3 பேரும் மயங்கிய நிலையில் கிடந்தனர்.

3 பேரையும் தீயணைப்பு படையினர் மீட்டு வெளியே கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர் 3 பேரும் உயிரிழந்ததாக கூறினார். அவர்கள் பாதாள சாக்கடையில் விஷவாயு தாக்கி பலியானது தெரியவந்தது. மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of