ஆந்திராவில் எம்.எல்.ஏ. சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம். 3 மாவோயிஸ்டுகளின் புகைப்படம் வெளியீடு

453

ஆந்திர எம்.எல்.ஏ.வை சுட்டுக்கொன்றவர்கள் என்று 3 மாவோயிஸ்டுகளின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அரக்கு தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வானவர் கிடாரி சர்வேஸ்வரா ராவ். மாவோயிஸ்டுகள் வழக்கமாக கடத்தி வருபவர்களை நீதிமன்றத்தில் விசாரிப்பது போல விசாரித்து விட்டு சுட்டுக் கொல்வது வழக்கம்.

அதுபோல்தான் சர்வேஸ்வரா ராவ் எம்.எல்.ஏ.விடம் மாவோயிஸ்டுகள் விசாரித்ததாக கூறப்படுகிறது. அந்த விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமா தப்பி ஓட முயன்றால், அவரை மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றதாகவும், அதைதெடர்ந்து சர்வேஸ்வரா ராவ் எம்.எல்.ஏ.வையும் சுட்டுக் கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து ஆந்திரா, ஒடிசா எல்லை பகுதிகளில் மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் எம்.எல்.ஏ.வை சுட்டுக்கொன்றவர்கள் என்று 3 மாவோயிஸ்டுகளின் புகைப்படங்களை ஆந்திரா போலீஸ் வெளியிட்டுள்ளது.

மாவோயிஸ்ட் சீனுபாபு, காமேஸ்வரி, வெங்கட்ரவி சைதன்யா புகைப்படங்களை விசாகப்பட்டினம் மாவட்ட எஸ்.பி. ராகுல் சர்மா வெளியிட்டார். தொடர்ந்து அவர்களை பிடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.