3 வயது குழந்தையை கொலை செய்த தாயின் 2 வது கணவர்

443

சென்னை பள்ளிகரணை,சித்தாலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன்.இவர் அதே பகுதியில் கங்கா என்ற பெண் கணவரை பிரிந்து இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.

இதானல் வெங்கடேசனுக்கும் கங்காவும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் திருமணம் செய்து ஒன்றாக வாழ்ந்து வந்தனர். மகளை பார்க்க கேரளாவில் இருக்கும் தங்கச்சி வீட்டிற்கு கங்கா சென்றுள்ளார்.

செல்லு போது 3 வயது மகனை வெங்கடேசனிடம் விட்டுவிட்டு சென்றுள்ளார். 3 வயது குழந்தை அருண் சாப்பிடும் போது மயக்கமடைந்ததாக வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

அப்போது குழந்தையின் தலையில் காயம் ஏற்பட்டிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்ததால் வெங்கடேசன் தப்பி ஒடிவிட்டார். இதனிடையே சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது கேள்விப்பட்டு சென்னை திரும்பிய கங்கா வெங்கடேசன் மீது போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில் குழந்தையை அடித்துக்கொன்றதாக வெங்கடேசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of