3 வயது பச்சிளங்குழந்தை…! – போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

585

ஜார்கண்ட் மாநிலத்தின் ஜம்ஷத்பூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 3 வயது சிறுமி கடத்தப்பட்டார். இச்சம்பவம் குறித்து அவரது பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகாரளித்ததை தொடர்ந்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர், சிசிடிவி காட்சிகளை வைத்து, குற்றவாளியை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். கைது செய்தவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

சிறுமியை கடத்தி, நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், சிறுமியை கொன்று புதைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கைதானவர் கொடுத்த தகவலின் படி, சிறுமியின் உடலை கண்டெடுத்த போலீசார், சிறுமியின் உடலைப் பார்த்து அதிர்ந்தனர். புதர் ஒன்றில், தலை இல்லாமல் சிறுமியின் உடல் புதைக்கப்பட்டிருந்தது.

சிறுமியின் உடலை கைப்பற்றிய போலீசார், உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். சிறுமியின் உடலை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அக்குழந்தையின் அந்தரங்க பகுதியில் காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது.

3 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவம் நிகழாமல் இருக்க தண்டனையை கடுமைப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.