“என்னால முடியாது..” Work From Home..! தற்கொலை செய்துக் கொண்ட நபர்..!

2340

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் பகுதியை சேர்ந்த 32 வயதான நபர், பொறியாளராக பணியாற்றி வந்தார். பெருந்தொற்று பரவி வருவதால், வீட்டிலேயே தனது அலுவலக பணியை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், வேலைப்பளுவை தாங்கிக்கொள்ள முடியாத இவர், வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்கிட்டு தற்கொலை கொண்டுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பொறியாளரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் வழக்கு பதிவு செய்த அவர்கள், தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement