33 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்

305

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று துபாயில் இருந்து இலங்கை வழியாக திருச்சி விமான நிலையத்திற்கு இன்று வந்தது. அதில் வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த முகம்மது ஜவாஹிர் என்ற பயணி தனது உடைமையில் மறைத்து வைத்திருந்த ரூ.9.62 லட்சம் மதிப்புள்ள தலா 100 கிராம் எடை கொண்ட 3 தங்க சங்கிலிகளை கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் நேற்றிரவு மலேசிய தலைநகர் கோலா லம்பூரில் இருந்து திருச்சிக்கு ஏர் ஏசியா விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்த போது , மகேந்திரன் , கேசவன் செல்வேந்திரன் ஆகியோர் ரூ.22.43 லட்சம் மதிப்புள்ள 733 கிராம் தங்க ஆபரணங்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் தங்கம் கடத்தல் தொடர்பாக 3பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of