கர்பமாக இருந்த பூனை..! கணேஷ் செய்த பயங்கரம்..! அதிர்ந்த போலீஸ்..!

1266

மலேசியாவின் கோலாலம்பூர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ். 42 வயதாகும் இவர், சம்பவத்தன்று, சுயசேவை சலவையகத்திற்கு சென்று தனது துணிகளை துவைக்க சென்றிருக்கிறார்.

அப்போது, அந்த இடத்திற்கு வந்த கர்ப்பமான பூனை ஒன்று, அங்கும் இங்கும் சென்று கணேஷை தொந்தரவு செய்தது. இதனால் உச்சகட்ட கோபத்தில் இருந்த கணேஷ், அந்த பூனையை வாஷிங்மெஷினின் உள்ளே போட்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டுவிட்டார்.

இதையடுத்து, அங்கு துணி துவைக்க சென்ற இருவர், பூனை இருப்பதை அறியாமல் வாஷிங் மெஷினை ஆன் செய்ததால், உள்ளே இருந்த பூனை பரிதாபமாக உயிரிழந்தது.

அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து வழக்கு பதிவு செய்த அப்பகுதி காவல்துறையினர், விலங்குகள் வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ், கணேசை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணையில் இருந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கணேசிற்கு 34 மாத சிறை தண்டனையும், 7 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.