ஆப்கானிஸ்தானில் தொடரும் பதற்றம்! 34 பயங்கரவாதிகள் பலி

312

தலிபான் தீவிரவாதிகளுக்கும், ஆப்கானிஸ்தான் அரசு படையினருக்கும் இடையே தொடர்ந்து நீண்டகால போர் நீடித்து வருகிறது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் வடபகுதியில் அச்சா மாகாணத்தில் பயங்கர்வாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 27 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.

இதேபோல், குஷ் டேபா மாவட்டத்தில் நடைபெற்ற மோதலில் 7 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் 11 பயங்கரவாதிகள் காயமடைந்தனர்.

மேலும், இந்த சண்டையில் பாதுகாப்பு படையை சேர்ந்த 7 பேரும் கொல்லப்பட்டனர் என பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of