எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 35 கைதிகள் விடுதலை

461

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் கைதிகள் பொது மன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன்படி வேலூர் மத்திய சிறைச்சாலையில் இருந்து ஆயுள் தண்டனை கைதிகளாக 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து வந்த கைதிகள் கடந்த 6 கட்டமாக 63 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் 7 வது கட்டமாக இன்று 3 பெண்கள் உட்பட 32 சிறை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். வேலூர் பெண்கள் மத்திய சிறையில் முதல் முறையாக ஆயுள் தண்டனை கைதியாக 3 பெண்கள் விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of