புதுச்சேரியில், 38 பேருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது

1067

புதுச்சேரியில், 38 பேருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமன், பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் 38 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் நேற்று ஒருவர் உயிரிழந்ததாகவும் கூறினார். தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு, தனி வார்டுகள் அமைத்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். காய்ச்சல் இருந்தால் அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement