உயிரிழந்து கரை ஒதுங்கிய 380 திமிங்கலங்கள்

2000

ஆஸ்திரேலியாவில் உயிரிழந்து கரை ஒதுங்கிய திமிங்கலங்களின் எண்ணிக்கை 380ஆக அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள தீவு கடற்கரையான டாஸ்மானியாவில் கடந்த 21 ஆம் தேதி கும்பல் கும்பலாக 460 பைலட் திமிங்கலங்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில், கரைஒதுங்கின.

அவற்றை மீண்டும் கடலுக்குள் விட முயற்சியில் அரசு ஆராய்ச்சியாளர் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 3 நாட்களாக மேற்கொண்டு வரும் முயற்சியில் 50 திமிங்கலங்கள் மீண்டும் கடலில் விடப்பட்டுள்ளன.

ஆனால் கரைஒதுங்கிய திமிங்கலங்களில் இதுவரை 380 திமிங்கலங்கள் உயிரிழந்துவிட்டதாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திமிங்கலங்கள் உயிரிழந்ததற்கான காரணங்கள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் டன்ஸ்பரோ நகரில் கடந்த 1996ம் ஆண்டில் 320 பைலட் திமிங்கலங்கள் ஒன்றாக கரையில் ஒதுங்கியதே பெரிய பதிவாக இருந்தது.

இந்தநிலையில் மிகப்பெரிய கூட்டமாக 460 திமிங்கலங்கள் ஒரே நேரத்தில் கரை ஒதுங்கியது ஆஸ்திரேலியாவில் மட்டுமில்லாமல், உலகிலேயே இவை தான் முதல் முறை ஆகும்.