3-வது முறையாக டெல்லி முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்

142

மூன்றாவது முறையாக டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பதவியேற்க உள்ளார்.

நடந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் 62 இடங்களை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதலமைச்சராக 3வது முறையாக இன்று பதவியேற்கிறார். அவருக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழா டெல்லி ராம்லீலா மைதானத்தில் பகல் 12.15 மணிக்கு நடைபெறவுள்ளது. பதவியேற்பு விழாவை முன்னிட்டு டெல்லியின் பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராஜ்காட் சவுக், டெல்லி கேட் சவுக், நேதாஜி சுபாஷ் மார்க், அஜ்மீர் கேட் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடியை தவிர எந்தவொரு அரசியல் கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of