சரியாக படிக்காத 3ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் செய்த கொடூரம்

272

மயிலாடுதுறை கீழையூரைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் அப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

அதே பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி பவித்ரா சரியாக படிக்காததால் ஆத்திரமடைந்த ஆசிரியர் பவித்ராவின் கையில் கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த மாணவி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆசிரியர் பாஸ்கரை கைது செய்துள்ளனர். மாற்றுத்திறனாளி மாணவியை ஆசிரியர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of