“ஆடைகளை கழட்டு..” இணைய வழியில் நடந்த ராகிங்..! ஷாக்கிங் ரிப்போர்ட்..!

1653

கல்லூரிகளில் புதியதாக இணையும் மாணவர்களை, மூத்த மாணவர்கள் ராகிங் செய்வது சில கல்லூரிகளில் நடைபெறுகிறது. ஒரு சில நேரங்களில், ராகிங் எல்லை மீறி நடப்பதும் உண்டு.

அந்த வகையில், இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில், இணைய வழியில், பாலியல் ரீதியிலான ராகிங் செய்யப்பட்டுள்ளது.

மூத்த மாணவர்கள் சிலர், பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்கள் மூலம், வீடியோ காலில் அழைப்பு விடுத்து, ராகிங் செய்துள்ளனர். உடைகளை கழட்டி உடலை காட்டுங்கள் என்றும் வற்புறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து, நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், அந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரே கூறியுள்ளார். மேலும், ராகிங் செய்த மாணவர்களை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.