அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி வந்த 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்

743

அரியலூர் அரசின் அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி வந்த 4 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடலூர் மாவட்டம் பூண்டி கிராமத்திலிருந்து அரசின் அனுமதியின்றி மாட்டு வண்டிகள் மூலம் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் கிராமத்திற்கு மணல் ஏற்றி வருவதாக ஆண்டிமடம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆண்டிமடம் போலீசார் ஆண்டிமடம் விளந்தை உள்ளிட்ட பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது நான்கு மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி வருவது கண்டறியப்பட்டு வண்டிகளை ஓட்டி வந்த வர்களிடம் போலீசார் விசாரணை செய்தனர். அப்போது அரசின் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த கடலூர் மாவட்டம் பூண்டி கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர், ராஜேஷ், ராமலிங்கம், ஆனந்த் ஆகியோர் 4 பேரை போலீசார் கைது செய்தனர். வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்த நான்கு பேரையும் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of