பெங்களூரு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ‘ரெட்’ அபாய அறிவிப்பு..!

2215

பெங்களூரு உள்ளிட்ட 4 மாவட்டங்கள், கொரோனா பரவும் வாய்ப்பு அதிகம் இருக்கும் பகுதிகளாகக் கண்டறியப்பட்டு அதனை சிவப்பு மண்டலம் அல்லது அபாயப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பெங்களூரு உள்ளிட்ட 16 இடங்களில் கொரோனா பரவும் வாய்ப்பு அதிகம் உள்ள இடங்களாக அறிவித்தது தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம். இந்த நிலையில், கர்நாடகத்தில் மைசூரு, உத்தர கன்னடா, பெங்களூரு, தட்சிண கன்னடா மற்றும் சிக்கபல்லப்பூர் ஆகிய பகுதிகளை சிவப்பு மண்டலமாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

இந்த பகுதிகளைச் சுற்றியிருக்கும் சில கிராமங்களும், கொரோனா பரவும் அபாயம் இருக்கும் பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து கர்நாடக மாநில மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் சுதாகர் கூறுகையில், மத்திய அரசு அறிவித்த 16 இடங்களில் பெங்களூரு இருக்கிறதோ இல்லையோ, ஏற்கனவே இந்த பகுதியில் தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சுமார் 20 லட்சம் தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் வந்து போகும் இடம் என்பதால், இங்கு கூடுதல் கண்காணிப்பு தேவைப்படுகிறது. இன்னும் இரண்டு வாரத்தில் மேலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

மாநில அரசு சில பகுதிகளை சிவப்பு மண்டலமாக அறிவித்திருப்பதால், அப்பகுதிகளுக்கு கூடுதல் கண்காணிப்பு வழங்க ஏதுவாகிறது என்றும் அவர் கூறினார்.

மைசூருவில் இதுவரை 13 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவர் நன்ஜாங்குட் பகுதியில் உள்ள மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தொழிலாளர். இவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், அங்கு பணியாற்றி வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

உத்தர கன்னடா மாவட்டம் பத்கால் நகரில் துபை உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்று வந்த 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மைசூரு – 14 பேருக்கு கரோனா
உத்தர கன்னடா – 8 பேருக்கு கரோனா
தட்சிண கன்னடா – 8 பேர்
பெங்களூரு – 45 பேருக்கு
சிக்கபல்லப்பூர் – 9 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of