ஒரே தொகுதியில் களமிறங்கும் 4 பொன்னுத்தாய்.., காரணம் திமுக ?

685

நடக்க இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தென்காசி தொகுதியில் 25 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் அமமுக வேட்பாளராக சு.பொன்னுத்தாய் போட்டியிடுகிறார். பொன்னுத்தாய் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதே பெயரில் மேலும் சிலர் அத்தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், அமமுக வேட்பாளர் சு.பொன்னுத்தாய் மட்டுமின்றி அவர் பெயரிலே கோ. பொன்னுத்தாய், ம. பொன்னுத்தாய், மா. பொன்னுத்தாய் 4 பேர் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இது குறித்து அமமுக வேட்பாளர் கூறுகையில்,

“தென்காசி தொகுதியில் அமமுக-வுக்கும், திமுக-வுக்கும் இடையே தான் போட்டி உள்ளது. இந்த போட்டியில் நான் நிச்சயமாக வெற்றி பெறுவேன். திமுக-வினர் தான் பொன்னுத்தாய் என்ற பெயரில் உள்ளவர்களை தேடிப்பிடித்து மனுதாக்கல் செய்ய வைத்துள்ளனர்.

என் பெயரில் எத்தனை பேர் போட்டியிட்டாலும் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. அ.ம.மு.க.வின் பரிசுப் பெட்டி சின்னம் ஒரே நாளில் மக்களைச் சென்றடைந்துவிட்டது. அமமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே, எங்கள் வெற்றியை தடுக்க முடியாது” என தெரிவித்தார்.

1
Leave a Reply

avatar
1 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
1 Comment authors
John Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
John
Guest
John

Ada pavinngala…..title la correcta podunga pa…..enammo 4 ponnu thaayaguradhuke dmk than Karanamunu sollura madhiri iruku