விஷவாயு தாக்கி 4 பேர் பலி – தலா 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

112

தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி அருகே உள்ள கீழசெக்காரக்குடி பகுதியில் உள்ள வீட்டில், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய கழிவுநீர் வாகனத்துடன் தொழிலாளர்கள் நேற்று மதியம் அங்கு வந்தனர்.

இந்த பணியில் நெல்லை மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த பாண்டி , பாலா, இசக்கிராஜா, தென்காசியை சேர்ந்த தினேஷ் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். அப்போது கழிவுநீர் தொட்டியில் இருந்து வெளியேறிய விஷவாயு தாக்கி  4 தொழிலாளர்களும் உயிரிழந்தனர்.

இதுகுறித்து தட்டப்பாறை வகாவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of