கொரோனா வைரஸ் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது

641

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ், சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ள இந்த நோய், 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது.

சீனாவில் நேற்று மட்டும் 17 பேர் பலியானதை அடுத்து அங்கு உயிரிழப்பு 3 ஆயிரத்து 136ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 11ஆக அதிகரித்துள்ளது.

சீனாவுக்கு அடுத்தப்படியாக இத்தாலி நாடு அதிக உயிரிழப்பை சந்தித்துள்ளது. இதுதவிர ஈரான், தென்கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of