விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் பலி

142

தூத்துக்குடி மாவட்டம், செக்காரக்குடியில் விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

செக்காரக்குடியை சேர்ந்த சோமசுந்தரம் என்பவரது வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணிக்காக, வீரநல்லூர் பகுதியை சேர்ந்த இசக்கி ராஜா, பாண்டி, தினேஷ் மற்றும் பாலா ஆகிய 4 பேர் சென்றுள்ளனர்.

அவர்கள் சுத்தம் செய்வதற்காக கழிவுநீர் தொட்டியை திறந்தபோது, அதிலிருந்து வெளியேறிய விஷவாயு தாக்கி 4 பேரும் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of