58 ரூபாய் கடனுக்கு உயிரிழந்த குழந்தை! குமரியில் பரிதாபம்!

569

கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியாபுரம் பகுதியில் வசிப்பவர் கெபின்ராஜ். இவரது மனைவி சரண்யா ஆவார். இந்த தம்பதிக்கு4 வயதில் ரெய்னா என்ற ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் சரண்யா அதே பகுதியில் உள்ள அந்தோணி என்பவரிடம் ரூ. 58 கடன் வாங்கியிருந்தார். இந்தப்பணத்தை திருப்பித் தருமாறு அந்தோணி பலமுறை கேட்டும் அதை சரண்யா கொடுக்க வில்லை என்று தெரிகிறது.

இதனால் இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றியதாகத் தெரிகிறது. இந்நிலையில் வீட்டிற்கு வெளியில் வழக்கம் போல விளையாடிக் கொண்டிருந்த சரண்யாவின் கனன் ரெய்னாவை துக்கிச்சென்றுள்ளார் அந்தோணி சாமி.

இதனையடுத்து மகனைக் காணவில்லை என்று காவல்துறையிடன் புகார் அளித்துள்ளார் சரண்யா. அப்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொள்கையில் முகிலன் குடியிருப்பு அருகில் தென்னந்தொப்பில் உள்ள தண்ணீர் தொட்டியில் சிறுவன் ரெய்னா சடலமாகக் கிடந்துள்ளான்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸார் சிறுவனது உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்தக் கொலைக்கு காரணமான அந்தோணி தாஸை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of