அழுதுக்கொண்டே இருந்த குழந்தை.. மூச்சை நிறுத்திய தந்தை..

1008

டெல்லியில் உள்ள காசிபாத் பகுதியை சேர்ந்த வாசுதேவ் குப்தா, ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், குடும்ப பிரச்சனை காரணமாக, கடந்த 20 நாட்களுக்கு முன்பு, வாசுதேவின் மனைவி, தனது கணவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.

இதன்காரணமாக மனஅழுத்தத்தில் இருந்த அவர், தொடர்ந்து அழுதுக்கொண்டே இருந்த தனது 4 வயது மகளை, கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். மேலும், ஆட்டோவில் குழந்தையின் உடலை வைத்துக்கொண்டு, மனைவியை தேடி அழைந்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த வாசுதேவின் தம்பி, போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், வாசுதேவை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement