நன்கொடை தாங்க.., தரமாட்டோம்.., அப்ப இந்தாங்க.., நன்கொடை தராததால் நேர்ந்த கொடூரம்..

643

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள முதலிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் சிவானந்தம். இவருக்கு அன்னபூர்ணா என்ற மனைவியும், 10-வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சிவானந்தம், எலெக்ட்ரிக்கல்- ஹார்டுவேர்டு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது கடைக்கு சிலர் நன்கொடை வந்துள்ளனர். அவர்களுக்கு நன்கொடை அளிக்க சிவானந்தம் மறுத்துள்ளார்.

இதனால் கடும் கோபமடைந்த அந்த கும்பல், கடையில் இருந்த சிவானந்தத்தையும், அவரது மனைவியையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து காவல்நிலையத்தில் சிவானந்தம் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவத்திற்கு காரணமான 4 பேரை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள வசந்த் உள்பட பலரை போலீசார் தேடி வருகிறார்கள்.