கிரானைட் முறைகேடு வழக்கு 40 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

214

மதுரை கீழவளவில் செயல்பட்டு வந்த ஒலிம்பஸ் கிரானைட் குவாரி முறைகேடாக கிரானைட் கற்களை வெட்டியெடுத்ததாக வந்த புகாரை அடுத்து கிரானைட் குவாரிகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

இதைதொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கிரானைட் முறைகேடு வழக்கில் துரை தயாநிதி-யின் 40 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மதுரை மற்றும் சென்னையிலுள்ள 25 அசையும், அசையா சொத்துகள் மற்றும் வங்கி கணக்கில் உள்ள வைப்புநிதி உள்ளிட்டவைகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of