பாராளுமன்றத் தேர்தலில் 40 சதவீதம் பெண்களை களமிறக்கும் மம்தா பானர்ஜி

349

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, நாடாளுமன்ற தேர்தலில் அங்குள்ள 42 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது. எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்கவில்லை.

42 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி நேற்று வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது, பாராளுமன்ற தேர்தலில் தற்போதைய எம்.பி.க்கள் 5 பேர் போட்டியிடவில்லை.

இந்த தேர்தலில் எங்கள் கட்சி 40.5 சதவீதம் பெண் வேட்பாளர்களை நிறுத்துகிறது. கடந்த தேர்தலில் 35 சதவீதம் பெண் வேட்பாளர்களை நிறுத்தினோம். இது பெண்களுக்கு பெருமைமிக்க தருணம்.

நாங்கள் எந்தக்கட்சியுடனும் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைக்கவில்லை. ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்காக கதவுகள் திறந்தே இருக்கின்றன. ஜார்கண்ட் மாநிலத்தில் 5 தொகுதிகளிலும், அசாமில் 6 தொகுதிகளிலும், பீகாரில் 2 தொகுதிகளிலும், அந்தமானில் உள்ள ஒரு இடத்திலும் போட்டியிடுகிறோம்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of