சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 43 பேர் கொல்லப்பட்டனர்

257
syria

சிரியாவில் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக, அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படை மற்றும் ரஷ்ய ஆதரவு படைகள் போரிட்டு வருகின்றன.

இந்த போரில் இதுவரை ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஈராக் எல்லை அருகே டெயிர் எஸ்ஸார் மாகாணத்தில் அமெரிக்க கூட்டுப் படையினர் வான்வழி தாக்குதல் நடத்தினர்.

இதில் 24 குழந்தைகள், அப்பாவி பொதுமக்கள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர்.