126 கோடி ரூபாய் மதிப்பில் 471 புதிய பேருந்துகள் – முதல்வர் பழனிசாமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்

597

சென்னையில் 126 கோடி ரூபாய் மதிப்பில் 471 புதிய பேருந்துகளின் சேவையை முதல்வர் பழனிசாமி இன்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமைச் செயகத்தில் நடைபெற்ற போக்குவரத்து துறை சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் ஜெயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் 517 பேருந்துகளை முதல்வர் கொடி அசைத்து வைத்தார்.

இந்த நிலையில் இன்று 126 கோடி ரூபாய் செலவில் 471 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார். விழுப்புரம் கோட்டத்திற்கு 103 பேருந்துகளும், சேலம் கோட்டத்திற்கு 77 பேருந்துகளும், கோவை கோட்டத்திற்கு – 43 பேருந்துகளும் வழங்கப்படுகின்றன.

கும்பகோணத்திற்கு 111 பேருந்துகள், மதுரைக்கு 30 பேருந்துகள், நெல்லைக்கு 46 பேருந்துகள் வழங்கப்படுகின்றன. இதில் 8 பேருந்துகள் கழிப்பறை வசதியுடன் கூடிய சொகுசு பேருந்து, படுக்கை மற்றும் குளிர்சாதன வசதியுடன் கூடிய 10 பேருந்துகள், 4 குளிர்சாதன பேருந்துகள், 38 விரைவு பேருந்துகள் என மொத்தம் 471 புதிய பேருந்துகள் மக்கள் சேவைக்காக அறிமுகம் செய்யப்பட்டன.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of