தேர்தல் பிரசாரத்தில் நகைச்சுவை நடிகர் செந்தில்

1682

மத்திய அரசு எந்த நல்ல திட்டங்களை கொண்டு வந்தாலும், சில கட்சியினர் வேண்டாம் என்று போராடி வருவதாக நகைச்சுவை நடிகர் செந்தில் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி, கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரை ஆதரித்து நாகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் நடிகர் செந்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், குமரி மாவட்டத்தில் கிடப்பில் கிடக்கும் இரட்டை ரயில் பாதை நான்குவழிச்சாலை திட்டங்களை மீண்டும் தொடங்க பொன்.ராதாகிருஷ்ணனுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Advertisement