மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான வழக்கில் புதிய திருப்பம்..! எடுக்கப்பட்ட அதிரடி முடிவு..!

302

கும்பல் தாக்குதல் மற்றும் கொலைகள் குறித்து பிரதமர் மோடிக்கு இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் கடிதம் எழுதினர். இந்த கடிதத்திற்கு எதிராக பீகாரை சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, 49 பிரபலங்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிரபலங்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது.

இந்நிலையில் 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கை ரத்து செய்ய பீகார் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

புகார் அளித்தவரின் தவறான தகவலால் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக விளக்கம் அளித்துள்ள காவல்துறை, அவர் மீது 182வது சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of